Saturday, February 13, 2010

காதலர்தின கவிதை-3

காதலின் முடிவு
---------------

ராமசாமியும் விமலாவும்
பக்கத்து பக்கத்து வீடு
முனுசாமியும் கமலாவும்
பக்கத்து பக்கத்து வீடு

எதிர்வீட்டு கமலாவை
ராமசாமி மானசீகமாக காதலித்தான்

எதிர்வீட்டு விமலாவை
முனுசாமி மானசீகமாக காதலித்தான்

திருமணத்துக்கு பிறகு
ராமசாமிக்கு விமலா மேல்
வந்தது காதல்
முனுசாமிக்கு கமலா மேல்

எல்லா காதலும்
இடவலமாற்றத்தில்தான் முடிகிறது

2 comments:

  1. ஏன் அப்படி முடிந்தால்தான் என்ன? என்று கேட்கத்தோன்றுகிறது :)

    ReplyDelete